Tuesday, April 23, 2024

சதம் இல்லை

 'எதுவும் சதம் இல்லை.' 

சலிப்பில் அம்மா சில வேளைகளில் உதிர்க்கும் வார்த்தைகள். யாரும் உதவி இல்லை, ஒத்தாசை இல்லை, அனுசரணை இல்லை என்ற அர்த்த தளத்தில், நான் புரிந்து கொண்டது.

அவர் அகராதியில் எண்ணற்ற சொல்லாடல்கள். அதிக படிப்பறிவு இல்லை. கையெழுத்து போடும் வரை அவருக்கு கல்வியறிவு.மற்றபடி, வாசிக்க அவருக்கு வாய்ப்பு இல்லை. அவரது வாசிப்பு யாவும், ஆய கலைகள் அறுபத்து நான்கில், முக்கியமான அறு சுவை அளிக்கும் சமையற்கலை எனில் அது மிகையன்று.

விருந்தோம்பல் முதல் இடம் பிடிக்கும் . விழுந்தடித்து, இருக்கிறதோ இல்லையோ எதையோ துரப்பி  அரை நூற்றாண்டுக்கு மேலாக , சமாளித்த குடும்ப மேலாண்மை, MBA க்கு சமம்.

அம்மிக் கல்லும், ஆட்டுக் கல்லும், அரிவாள் மனையும், விறகு அடுப்பும், ஊதாங்குழலும் இன்னும் அவள் கைபட்டு மேன் மை அடைந்த பழைய நாள்களை அசைபோடும். ஓரங் கட்டப்பட்ட, தொல் பொருள் வரிசையில் சேர்ந்த இவை அவளின் இணை பிரியா ஒட்டு, உறவு என்று தான் நினைக் க தோன்றும்.

அறுபதை தாண்டிய வாழ்க்கையில் அசை போடும், பண்டைய நிகழ்வுகள், பசியா ற் றும் பதார்த்தம், பண்பு உணர் யதார்த்தம்.

Monday, April 22, 2024

முடிந்ததா?

 வெட்டிய மின்னல்

கொட்டிய மழை

 பா ளை நிலம்

 பயம் கொள்ளும் 

பெருக்கெடுத்த ஆறு 

பெரு நிலத்தில் ஊறு!

கட்டிய கடை 

முட்டிய விடை

முடிந்ததா கதை?

முடிவில்லா வதை 

புவி வெப்ப நாசம் 

இழப்பை 

ஈடு செய்யும் 

இயற்கை ! 

புரிந்து கொண்டோமா ?

பொல்லாங்கு 

இழை மனிதம் 

பொருள் வெறியில் 

போட்டி நெறியில்

ஐம் பூதங்களை 

அச்சுறுத்தும்

பெரு வணிகம் 

Thursday, April 18, 2024

சுயம்

 குரங்கு   மன ம் 

சிரங்கு குணம் 

தேயுது தினம்

தேடுது சுயம் 

Thursday, March 14, 2024

நான்

 'எதுவும் நிரந்தரம் இல்லை

என்றார் ' ,ஒருவர்

'நிரந்தரம் என்பதும்

நிரந்தரம் இல்லை'

என்றேன்,

நான் 

Thursday, February 15, 2024

தாளி

 மூக்கைத் துளைக்கும்

தாளி ப்பு

முணகல் போக்கும் 

தாளிப்பு

அடைப்பை நீக்கும்

தாளிப் பு

சமயலறை சுவாசிப்பு

Tuesday, January 30, 2024

போச்சு

கடு கடு முகம்

கனி வுடன் முரண்

சிடு சிடு முகம் 

சினத்துடன் அரண்

வெடு வெ டு பேச்சு

வெல வெலப்பு மூச்சு

வேண்டியது போச்சு

Sunday, January 28, 2024

சகிப்பு

 சகிப்பு த் தன்மை அறிந்த நாம், அதன் வழி செல்வதில் தடுமாற்றங்கள் பல. எளிதில் விலகுவது, நியாயம் கற்பிப்பது அதிகம். சற்று நிதானித்து நின்று யோ சித்தால் அதன் அர்த்தம், மதிப்பு விளங்கிடும்..

குடும்பம் தொடங்கி, சமூக வாழ்க்கை வரை ஒரு நெடிய போராட்டம் ஊடே நகர வேண்டிய அவசியம் இந்த உணர்வு மனிதர்களிடையே நிலைப்பதற்கு, அதன் படி அவர்கள் வாழ்க்கையில் நடப்பதற்கு அத்தியாவசியம்.சமூக நல்லிணக்கத்தை சாதிக்கும் அருங் கருவி சகிப்புத் தன்மை ஆகும்.

பொறை யுடமை குறித்து வள்ளுவம் பகர்வதும் இது குறித்து தான்.மனப்பாடம் அளவில் தேர்வோடு நின்று போன விழுமியங்களில் இதுவும் ஒன்றாகும்.

உலக அரசியல் களத்தில் கூட இது, அருகி வரும் பண்பாக நிலவுகிறது. கள முனைகள் அரங்கேறி, வளங்களை அழித்து ,உயிர்களை இலட்சக்கணக்கில் கொள்ளை கொள்ளும் அளவிற்கு கடுமையான  போக்கிற்கு விரைவாக செல்கிறது.

நியாயம் கற்பிக்கும் பாடங்கள் பல சாதி, சமய, மத, பொருளியல் கோணங்களில், பல உலக மன்றங்களில் வைக்கப்படுகின்றன.


Saturday, January 27, 2024

இல்லை!

 எட்டி இருந்தேன்

எட்டி இல்லை

சுட்டி இருந்தேன்

சூ து இல்லை

கட்டி இருந்தேன்

கவடு இல்லை

முட்டி இருந்தேன்

மூ டம் இல்லை 

வெட்டி இருந்தேன்

வெறுப்பு இல்லை 

Wednesday, December 27, 2023

விட்டுப் போவது

ஒத்துப்போவது 

உணர்வு செத்துப் போவது

கற்றது போதாது 

கல்லாதது ஏறாது

உற்றுப் போவது 

அற்றுப் போவது

அருகில் 

விட்டுப் போவது 

Monday, December 18, 2023

பூட்டகம்

 வேலை வாங்குவார்

வேண்டிய போது

கெடு விதிப்பார் 

தொடு திரை கணினியாய் 

தொழில் சேர்ப்பார் 

கலை இலக்கிய உலாவில்

அணி சேர்வார்

தனிப் பெருமை

நாட்ட

தாளம் போடுவார்

பிறர் உழைப்பும்

உரிமம் சேர்த்து

ஊடக பெருமை

வே ட்டகம் தோ ற்கும் 

பூட்ட க மனிதர் 



Wednesday, December 13, 2023

பேத்தி

 குளிர் கால குளுமை

சுழியம் செல்ல 

கும்மிருட்டு

விசும்பின்

விக்கல்

குடை விரிக்கும் முன்

தாகத்தில் தாளம் போட

போர்த்திய ஆடை 

நேர்த்தி போ தாயாம்

பனித் துளிகள்

வாழ்த்தில் 

'பாலி கிளினிக் '

படியில்

"மைலா" வரவை

தரிசிக்க

"புளுவா "மாலை 

Monday, December 4, 2023

நடக்கும் விதம்

 வெறுப்பே ற்க 

விரையும் மனம்

பொறு ப் பே ற்க

 கரையும் 

உரைப்பது ஒன்று

நடப்பது ஒன்று

உரைக்கும் விதமா ! 

நடக்கும் விதம் ?


Sunday, December 3, 2023

வரமா ? சாபமா?

 முதுமை வரமா? சாபமா? 

குடும்ப அமைப்பில்

இது வழக்கமாக எழும் கேள்வி. உருவாக்கிய, உதவிய தாயும், தந்தையும் தம் கடமை முடித்து அகவை கூடும் காலம் ,துணையாக நிற்கும் வாரிசுகள் மெல்ல, மெல்ல விலகிப் போக , தனி மரமமாய் தள்ளாடும் கோலம். தாங்க முடியாத துயரம்!

தனிக் குடும்ப ஏ ற்பாட்டில், தன் கடமை நிலை மறந்து ,தடுமாறும் உறவு. கடந்த காலத்தை எளிதில் புறந்தள்ளி, விட்டு விலகி, விக்கி, நிற்கும் !

பொருளாதார தற் சார்பு முதுமையில் பேருதவி என்றாலும், தள்ளாத நிலையில் உணவு சமைப்பது, வீட்டு பராமரிப்பு,ஓய்வாக வெளியே காலாற செல்வது போன்ற, தங்கள் அவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்திட , ஓடி, ஆடி பணி மேற்கொள்ள, உணர்வு பூர்வமான ,உதவிக் கரங்கள் அவசியம்.

தமிழ்ச் சமூக த்தில் கூட்டுக் குடும்பம் உடைந்து, தனிக் குடும்பம்  தழைத்த விளங்கும் இன்றைய நிலையில் இப் பிரச்சினை கூடுதல் அக்கறை மற்றும்

கவனம் பெறுகிறது.


Tuesday, November 21, 2023

என்ன?

 ஓடிக் கொண்டே இரு

ஓட்டிக் கொண்டே இரு

உருண்டு கொண்டே இரு

உருட்டிக் கொண்டே இரு

இருத்தல் தேவையில்

இருள் என்ன ?

பகல் என்ன ?

முதல் என்ன ?

முடிவு என்ன ?

Sunday, November 19, 2023

இலையுதிர் காலம்

 அடை மழை ஐப்பசி

கழிந்தது

கார் கால கார்த்திகை

புலர்ந்தது

உறவு அழைக்க

வானூர்தி பயணம்

இலையுதிர் காலம்

வரவேற்பில்

இனிமை சேர்ந்த்திட்

குளுமை கூடிட

Sunday, November 12, 2023

செம்புலம்!

 சிந்தும் குருதி-

சிவப்புதான்

எவருக்கும் !


குழந்தைகளை கொல்வது

உயிர்த்திடும் குழவிகளை

மருத்துவ 

மனைகளில் 

சிதைப்பது


காக்கும் மருத்துவன் -

பொதுவானவன் 

புரிபவனுக்கும் 

 படுபவனுக்கும் 


அவனையும்

ஒழிப்பது  சரியா ?

நெறியா?


அறம் -

மனிதத்தின் அடிப்படை ப் 

பண்பு

மார்க்கத்திற்கு  மார்க்கம் 

மாறும் விழுமியமன்று !


" மற த்திற்கும் 

அன்பே துணை" 


கொல்லும் சினம்

 கொள்கையாக 

 கோலோச் சும்

 அதிகாரம்   !


சகிப்பின்மை சக்கரத்தில்

 திசை திருப்பும் 

ஆயுத பலத்தில்

 நியாயம் பேசும்


 உலகம் 

பேச்சளவில் 

உதட்டளவில்


உண்மை தடுமாறும் 

மன்றங்களில் 

மல்லாடும் 


அடுக்கடுக்காய் 

உயிர்கள்

பலியாகும்


வறண்ட தேசம்

நிறம் மாறும்

செம்புலம் சேர்க்கும்


நொடி தோறும் 

வெறி

வெடியில் 

நெறி பிறழும்.........


Friday, November 10, 2023

நியாயம்

 கற்பி

நியாயம் ?

அடிக்க, அழிக்க....

ஒடுக்க, ஒழிக்க.....

நசுக்க, பொசு க்க ....

நாளெல்லாம் வெடிக்க.......

நாகரிக  சமூகம் 

நகாசு வேலை

போரின் சித்தரிப்பு

அழிப்பு வேலை

உயிர் உற்பத்தி

 விஞ்சும்

எல்லை கடந்து 

தொல்லை சேர்க்கும்


பக்கம்

 ஒரு பக்கம்

மறு பக்கம்

எத்தனை பக்கம் ?

உந்தன் பக்கம்

எந்தன் பக்கம் 

Thursday, November 9, 2023

 மனிதம் இருக்கிறதா?

கேள்வி எழும்

ஒவ்வொரு முறையும்

பிஞ்சுகள்

உதிரும் போது

கந்தக நெடியில்

கால வெளியில் 

கரை கடந்து

நுரை பொங்கிடும்

பகை யுணர்ச்சி! 

நெருக்கிடும் போராட்டம்

எல்லைச் சிறைகள்

தாண்டி

உலுக்கிடும் 

ஆதிக்க சக்திகளை 

மார்க்கம் யாவும்  நேயமே ?

Saturday, November 4, 2023

ஊர்வலம்

 நியதி, நீதி

எ வருக்கு ?

அடிப்பவனுக்கு 

இல்லை

பட்டவனுக்கே 

சொந்தம்

வலியும், கிலியும்

துன்பமும், துயரமும்

இருந்த இடம் இழந்த போதும்

இருக்கும் இடம் போதும் போதும்

மறைந்த இடம்  மறந்த போதும்

மக்கள் வாழ்வில் இருந்தால் போதும்

காலியான வாழ்க்கையில் கூலியாக

குண் டி நனைந்தால் போதும் போதும்

துரத்தும் துயரம் நூறாண்டு சந்ததிகள்

சகதியில் சதி வலையில் ஆதிக்க சக்திகள்

அடிமைப்படுத்தும் வாழ்க்கை எம்மிடம்

இல்லை

ஒருக்களித்தே  ஒண்டி வாழும்

புலமும் புழுதியாயிற்றே!

போரின் பிடியில்

ஊரும் உறவும்  சிதைந்து

இயற்கையின் இறக்கமும்

எட்டிப் போக

வன்மம்  கோ லோ ச்ச

வக்கிரம் உக்கிரம் அடைய

வாய்மூடிடும் உலகம் 

வாய்க்கரிசி வண்டி, வண்டியாய்

நிவாரண பதாகை  ஏ ந்தி 

நித்தில ஊர்வலம் 

தவறல்ல

 படைப்பின் தவறல்ல

தவறி ன் படைப்பு

வளர்ப்பின் தவறல்ல

தவறின்  வளர்ப்பு



Saturday, October 21, 2023

அணில்

 முன்னங் கால் 

இரண்டு தூக்கி

கங்காரு போல் 

இரு கைகள் சேர்த்து

விழிகள் 

முன் நிறுத்தி 

வால் ஆட்டி, 

அசைத்து 

விசில் ஒலி

 எழுப்பி

விசை ஒலி

 மாந்தர்

சிந்திய, சிதறிய 

பருக்கைகள் 

சேகரித்து

உண்ணும் பிள்ளை

உன்னால் இல்லை

தொல்லை 

வியாபாரி

 ஒடுக்குவது , ஒழிப்பது

செல்வம் கொழிப்பது 

வே லிக்குள் அடைப்பது

கூலியாக  காலியாக்குவது

குடி நீர், மின்சாரம் 

தன் அதிகாரத்தில் 

வழியும், பாதையும்

கண்காணிப்பில் 

நொடியும்  துடிமத்தில்

நோஞ்சான் சமூகமாக 

நுண்ணறிவு தொழில்நுட்பம்

ஓங்கியவன் ஆயுதமாய் 

நியாயம் பேசுவார்

வாழ்விடத் தை விட்டு போ

நிவாரண வண்டிகள் அணி

ஆராதிக்கும் உம்மை 

சவப்பெட்டி  தொடக்கமாக

சன நாயக கோமான்

சமரசம் ஆயுத முனையில்

சந்ததி அழித்து 

நீ சுட்டால் பாதுகாப்பு 

உனக்கு விடுதலை

அவன் தடுத்தால் 

தறுதலை 

தீவிரவாதி

அளவுகோல் அளிப் பான் 

ஆயுத முனையில்

வியாபாரி


Monday, October 16, 2023

யுத்தம்

 யுத்தம் 

உயிர் இழந்த 

சித்தம்

உலகின் ஆன்மா

 நிசப்தம்

Friday, October 13, 2023

பஞ்ச தந்திர நாயகன்

 அமைதி கெடுப்பேன் 

அடுத்த வீட்டு

 கொள்ளி யாய் 

அடுத்து கெ டுப்பே ன் 

கடனில் தருவேன்

உடன் அளிப்பேன் 

உன் நிலம் எனக்கு

உன் வளம் எனக்கு 

ஆயுதம் கொடுப்பேன்

அழகாய் விளக்கம் 

அளிப்பேன் 

பகை சேர்ப்பேன்

புகை மூட்டுவேன்

அடித்து சாக

சவப்பெட்டி தருவேன்

கடனில்

அமைதி எமக்கு

அமை தீ 

உனக்கு

பஞ்சாயத்து

எம் பார்வையில் 

பஞ்ச தாயத்து

உம் கழுத்தில்

'பஞ்ச தந்திர 

நாயகன்'

 

Thursday, October 12, 2023

' ந ரிதாரம்'

 உன்னை அடித்தால் 

அவனுக்கு வலிக்கும்!

நீ அடித்தால்

பிறருக்கு

வலிக்காதா?

அடிபட்ட வன், மிதி பட்டவன்

அடிமையாய் 

ஆயிரம் ஆண்டுகளாய்

 நிலம் இழந்து , நீர் இழந்து

 ஏதிலியாய் 

உரிமை வேட்கை 

உனக்கு மட்டும்

சொந்தமா?

பூர்வீக குடிகளை

கொன்று குவித்த

மென்று தின்ற

வல்லதிகாரம் 

உலகைச் சுற்றி 

வலம்

இரத்த வாடையில்

ஆயுதம் தரித்து

எல்லை தாண்டி

கொள்ளிவாய்

சனநாயக

 ' நரிதாரத்தில் '

Wednesday, October 11, 2023

வெறி

 கருடனை மிஞ்சும் 

திருடன்

நீர் அணிந்தால் 

என்ன?

ஊர் அலைந்தால்

 என்ன?

சீர் நின்றாள் !

சரி

சீறி நின்றாள் !

வெறி 

Sunday, October 1, 2023

மறைவில்

உணர்ச்சிவய  ஊர்வலம்

உள்ளது காணார் 

உண்மை உணரார்

உள்ளத்தில் உள்ளதை

அறியோம்

ஊரில் உள்ளதை 

அறிவோம்

நேரில் பேச

நெருடும்

மறைவில் மணிக்கணக்கில்

சனநாயக பாடம்


நீயா, நானா

 பெற்றது நீயா?

பிறந்தது நானா?

உற்றது நீயா ? 

உணர்ந்தது

நானா?

கற்றது நானா?

கற்பித்தது 

நீயா?

விட்டது நீயா?

பிடித்தது 

நானா?


Friday, September 22, 2023

இருந்தது !

 தென்னை இருந்தது

திண்ணை இருந்தது

கிணறு இருந்தது

மழை நீர் சேர்ந்தது

மரம் இருந்தது

நிழல் சேர்ந்தது

தொட்டி கழிவறை

அடுப்பு எரிக்கும்

சாம்பலில் நிறைந்தது

பருவ முறையில்

விளை நில

எருவுக்கு சென்றது

சாலவம் தவளைகள்

இருப்பிடம் ஆனாது

கொசு என்பதே

அறியாமல்

ஈக்கள் மட்டும்

வீடுகளில், வீதிகளில்

 உலா வந்தது

தெருவெங்கும் 

குழந்தைகள் 

விளையாட்டு

குதூகலம் சேர்த்தது

மின் வசதி , 

எங்கோ ஒன்று

புழுக்கம் 

இரைச்சல்

அருகி நின்றது

சாணம் மெழுகிய 

இல்லம்

சந்ததி சேர்த்தது.